நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1,660 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 13,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன: சூல்கிப்லி அஹ்மத்

கோலாலம்பூர்:

கடந்த ஜூன் 30 நிலவரப்படி, சுகாதார அமைச்சின் மொத்தம் 13,072 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதில் 1,660 சிறப்பு மருத்துவர் பணியிடங்களும் 11,412 சிறப்பு அல்லாத மருத்துவர் பணியிடங்களும் அடங்கும் என்று சுகாதார அமைச்சர் சூல்கிப்லி அஹ்மத் கூறினார்.

2024, 2026க்கு இடையில் மொத்தம் 3,510 மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 1,252 நிரந்தர மருத்துவர்களும் 2,258 ஒப்பந்த மருத்துவர்களும் அடங்குவர்.

ராஜினாமா செய்த மொத்த நபர்களில், 51.4% பேர் தனியார் துறைக்கும், 36.8% பேர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், 4.5% பேர் சட்டரீதியான அமைப்புகளிலும் இணைந்துள்ளனர்.

மேலும் 2.9% பேர் வெளிநாட்டில் பணிபுரிந்தனர் அல்லது வசித்தனர், 2.6% பேர் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகவும், 1.5% பேர் மேல்படிப்புக்காகவும், 0.3% பேர் சொந்த மருத்துவமனைகளைத் திறந்தும் ராஜினாமா செய்தனர்.

மேலும், எட்டு மருத்துவ நிபுணர்கள் ராஜினாமா செய்ததாகவும் அல்லது வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜினாமா செய்த அல்லது வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த மருத்துவர்கள், காலிப் பணியிடங்கள், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை, மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி நியமனங்களுக்கான காத்திருப்புக் காலங்கள்,  பொது சுகாதார சேவையில் மருத்துவர்களைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளின் செயல்திறன் ஆகியவை குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சூல்கிப்லி இவ்வாறு கூறினார்.

அதே காலகட்டத்தில் சுகாதார அமைச்சகம் 14,064 நிரந்தர மருத்துவ அதிகாரிகளையும் 9,847 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளையும் நியமித்துள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset