செய்திகள் மலேசியா
குழப்பமடைய வேண்டாம்; நான் பதவியில் நீடிக்கிறேன்: பெர்லிஸ் மந்திரி புசார்
கங்கார்:
பெர்சத்து உறுப்பினர் பதவி இரண்டு தேர்தல் காலங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த போதிலும், மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் தனது பதவி தொடர்வதாகவும், நிர்வாகம் வழக்கம் போல் செயல்படுவதாகவும் பெர்லிஸ் மந்திரி புசார் அபு பக்கர் ஹம்ஸா வலியுறுத்தினார்.
இந்த இடைநீக்கம் ஒரு கட்சியின் உள்விவகாரமாகும்.
அது மாநில அரசின் நிர்வாகத்தின் நிலையையும், சுமுகமான செயல்பாட்டையும் பாதிக்காது என்று அவர் கூறினார்.
பெர்லிஸ் மாநில அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையில் தனக்கு வழங்கப்பட்ட நம்பிக்கையைத் தொடர்ந்து ஆற்றி வருவேன்; தனது கடமைகளை நிறைவேற்றுவேன்.
கட்சியின் இடைநீக்கம் குறித்த முடிவால் மாநில அரசு நிர்வாகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
மேலும், யாரும் இவ்விஷயத்தில் குழப்பமடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 8:48 am
புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்
October 21, 2026, 11:12 pm
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 லிட்டருக்கு 30 சென் குறைந்தது: டீசல் லிட்டருக்கு 10 சென் குறைந்தது
October 21, 2026, 11:09 pm
