நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா மரணச் சடங்கு உதவி நிதித் திட்டத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும்: குணராஜ்

செந்தோசா:

மித்ராவின் மரணச் சடங்கு உதவித் திட்டத்திற்கான விண்ணப்பக் காலத்தை வரும் டிசம்பர் 31 வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்திலேயே விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், ஆண்டின் இறுதி மாதங்களான நவம்பர்,  டிசம்பரில் குடும்ப உறுப்பினர்களை இழக்கும் தகுதியுள்ள இந்திய பி40 குடும்பங்கள் உதவி பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

மரணம் என்பது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டு அட்டவணைக்கு ஏற்ப நிகழ்வதில்லை. அன்புக்குரியவர்களை இழக்கும் குடும்பங்கள், இறுதிச் சடங்கு செலவுகள், உடலைக் கையாள்வதற்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சுமைகளை உடனடியாக எதிர்கொள்கின்றன.

இத்தகைய சூழலில், வழங்கப்படும் 1,500 ரிங்கிட் உதவித்தொகை துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

விண்ணப்பங்கள் முன்கூட்டியே நிறுத்தப்படுவதால், தகுதியுள்ள குடும்பங்கள் உதவி பெறும் வாய்ப்பை இழக்கக்கூடும்.

குறிப்பாக, விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்ட பின்னர் குடும்ப உறுப்பினர்களை இழப்பவர்களுக்கு இது நியாயமற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, மித்ரா உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் குணராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset