நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை முழுவதும் மின்தடை

கொழும்பு:

இலங்கை நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தேவையைவிட அதிகமாகச் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியானதால் மின்சார விநியோகக் கட்டமைப்பு செயலிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

நாடு முழுவதும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.

பழுதைச் சரிசெய்வதில் பொறியாளர்கள் ஈடுபட்டனர் என்று அரசாங்க மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்தது.

மின்சார விநியோகம் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எரிசக்தித்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க (Anura Karunathilaka) கூறினார்.

மீட்புப் பணிகளில் உதவ வீடுகளில் சூரியசக்தி மின்சாரக் கட்டமைப்புகளை வைத்திருப்போர் அவற்றைத் தற்காலிகமாகத் துண்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் இதேபோன்ற மின்தடை ஏற்பட்டது.

அப்போது மின்சார விநியோகத்தை முழுமையாகச் சீரமைக்க ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

இலங்கையில் சூரியசக்தி மூலம் 3,000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

ஆனால் பகல்நேர மின்சாரத் தேவை 2,000 முதல் 2,500 மெகாவாட் வரை மட்டுமே உள்ளது.

இந்த வேறுபாடு மின்சார விநியோகக் கட்டமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset