நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

கோலாலம்பூர்:

நேப்பாள வெள்ளப் பேரிடரில் சிக்கி மாயமான மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரடியாக சந்தித்து பேசினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் நேப்பாளத்தில் மிகவும் மோசமான வெள்ளப் பேரிடர் நிகழ்ந்தது. இந்த வெள்ளப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கைலாய யாத்திரை உட்பட சுற்றுலாவுக்காக நேப்பாளம் சென்ற 55 மலேசியர்கள் இப்பேரிடரில் சிக்கிக் கொண்டனர்.
ஒரு சில நாட்களுக்கு பின் ஒருவர் மட்டும் பாதுகாப்பாக நாடு திரும்பினார்.

எஞ்சிய 54 பேரின் என்ன ஆனார்கள் என்று இன்று வரை பதில் தெரியாமல் உள்ளது.

இறைவனின் அருளால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள் என அவர்களின் குடும்பத்தார் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேப்பாள வெள்ளப் பேரிடரில் சிக்கி மாயமான மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரடியாக சந்தித்து பேசினார்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

நேப்பாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்ப பிரதிநிதி ஆர். மணிவண்ணன் பிரதமருக்கு உரிய விளக்கங்களை தந்தார்.

பிரதமர் துறையின் சட்டத் துறையின் துணையமைச்சர் குலசேகரன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset