செய்திகள் மலேசியா
வேல் மாறல் பாராயண புத்தக வெளியீட்டு விழா: பண்டாமாரான் ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் வெளியீடு கண்டது
கிள்ளான்:
ஶ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஸஷ்டி இளைஞர் குழுவின் ஆதரவில் மற்றும் இந்து தர்ம மாமன்றத்தின் ஆதரவுடன் வேல் மாறல் பாராயணம் புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது
முருகனின் கந்த ஸஷ்டி கவசம், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 2024ஆம் ஆண்டு திட்டத்தை வகுத்தோம்

இரு ஆண்டுகள் கழித்து தற்போது 2026ஆம் ஆண்டு வேல் மாறல் பாராயண புத்தகத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்பதை கொண்டு இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் பாலகணேஷ் நம்பிக்கை ஊடகத்திடம் தெரிவித்தார்

சந்தைகளில் அதிகமான புத்தகங்கள் இருக்கலாம். இருப்பினும் சிலரால் இந்த புத்தகத்தை வாங்க முடியாத சூழலும் இருக்கும். இதனை அடிப்படையாக கொண்டு தான் புத்தகத்தை இலவசமாக வழங்க முடிவு செய்தோம் என்று குறிப்பிட்டார்
வேல் மாறன் பாராயணமும் அருணகிரிநாதர் குறித்த தகவல்களும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்
இந்நிலையில் கந்த சஷ்டி & சத்ரு சம்ஹார வேலின் மகிமையை பற்றிய சிறப்பு சொற்பொழிவை தமிழகத்திலிருந்து வந்திருந்த முனைவர் இரா. விஜயகுமார் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்து தர்ம மாமன்ற தலைவர் ரிஷிக்குமார், பண்டாமாரான் ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் தலைவர் திரு பத்துமலை, இந்து பெருமக்கள் அனைவருக்கும் கலந்து சிறப்பித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:47 pm
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:47 am
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
October 17, 2026, 11:44 am
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
October 17, 2026, 11:43 am
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
October 17, 2026, 11:03 am
மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?
October 17, 2026, 10:50 am
