செய்திகள் மலேசியா
உங்களைப் பார்க்க நான் விரும்பவில்லை: நெகிரி செம்பிலான் மந்திரி புசாரை துவாங்கு முஹ்ரிஸ் கடுமையாகக் கண்டித்தார்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார் பதவிக்கு சர்ச்சை நிலவி வரும் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிமை நேருக்கு நேர் சந்தித்துக் கடுமையாகக் கண்டித்தார்.
பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட அந்தச் சம்பவத்தில்,
டத்தோ இஸ்மாயில், தனது பதவி விலகல் குறித்து ஆட்சியாளர்களின் பெரும் முத்திரைக் காப்பாளருக்குக் கடிதம் எழுதியிருந்ததாக துவாங்கு முஹ்ரிஸ் கூறினார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அவர் மற்ற வழிபாட்டாளர்களுடன் நின்றுகொண்டு, ஜுவாசே சட்டமன்ற உறுப்பினருக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்.
அதே சமயம், இஸ்மாயிலைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இஸ்மாயில் லாசிம் சமீபத்தில் ஆட்சியாளர்களின் பெரும் முத்திரைக் காப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ஆட்சிக் குழுவுடன் எடுக்கப்பட்ட முடிவு செல்லுபடியாகும்.
நான் இனி நெகிரி செம்பிலானின் யம்துவான் பெசார் அல்ல என்று கூறியிருந்தார்.
விஷயம் அதுதான், இன்று என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்?"
"அவர் சொன்னதை வாபஸ் பெறாத வரை, என்னை பார்க்க வேண்டாம். போய்விடுங்கள், என்னை பார்க்க வேண்டாம்.
நான் உங்களைப் பார்க்க விரும்பவில்லை, சரியா? புரிகிறதா? என்று துவாங்கு முஹ்ரிஸ் சாடினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:47 pm
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:47 am
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
October 17, 2026, 11:44 am
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
October 17, 2026, 11:43 am
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
October 17, 2026, 11:03 am
மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?
October 17, 2026, 10:50 am
