செய்திகள் மலேசியா
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர்:
கடந்த அக்டோபர் 15 அன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் கல்வத் வழக்கில் ஈடுபட்டதற்காக சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையால் (ஜாய்ஸ்) கைது செய்யப்பட்ட நபர் நான் தான்.
முன்னாள் மத்திய அமைச்சர் நிக் நஸ்மி இதனை உறுதிப்படுத்தினார்.
ஒரு அறிக்கையில், இந்தச் சம்பவம் ஒரு தவறு என்று அவர் ஒப்புக்கொண்டதோடு, தனது மனைவி, குடும்பத்தினர், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் மன்னிப்புக் கோரினார்.
பிரிக்பீல்ட்ஸில் உள்ள தங்களது ஸ்டுடியோவில் அவரும் அவரது நண்பர்களும் ஒரு கலந்துரையாடலைத் தொடங்கியதாகவும், பின்னர் விவாதிக்கப்பட்டு வந்த திட்டம் தொடர்பான சில பொருட்களைப் பார்ப்பதற்காக பெட்டாலிங் ஜெயாவிற்குச் சென்று அதைத் தொடர முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
ஜாய்ஸ் அதிகாரிகள் வந்தபோது, நானும் அந்தப் பெண்ணும் மட்டுமே அங்கு இருந்தோம்.
அது ஒரு குற்றம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
ஜாய்ஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதைப் போல, சந்தேகத்தை எழுப்பும் எந்தவொரு ஒழுக்கக்கேடான செயலையும் தானும் அந்தப் பெண்ணும் செய்யவில்லை என்றும் நிக் நஸ்மி விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:47 pm
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:44 am
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
October 17, 2026, 11:43 am
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
October 17, 2026, 11:03 am
மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?
October 17, 2026, 10:50 am
