செய்திகள் மலேசியா
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
ஒரு வட்டார பெட்ரோலிய வர்த்தக மையமாக மாறும் தனது இலக்கை அடைவதற்கு, மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்கி, நிதியுதவிக்கான அணுகலை எளிதாக்க வேண்டும்.
அத்தொழில்துறையில் 28 வருட அனுபவம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் இதனை கூறினார்.
சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு, மலேசியா நிதி நிறுவனங்கள், தொழில்துறை வல்லுநர்களின் ஆதரவுடன் உள்ளூர் நிபுணத்துவத்தை உருவாக்க வேண்டும்.
அவர், முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்காக மாதத்திற்கு இரண்டு முதல் நான்கு அமர்வுகளுடன் கூடிய ஆறு மாத கால பயிற்சித் திட்டத்தை முன்மொழிந்தார்.
இந்தப் பயிற்சியானது நிதி மேலாண்மை, வாடிக்கையாளரை அறிதல், நடைமுறைகள், உரிய கவனம் செலுத்துதல், வர்த்தக இடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
சரியான சர்வதேச வர்த்தகம், நிதியளிப்பு முறைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதே இதன் நோக்கமாகும்.
சரக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்பு, அவர்கள் மூலதனத் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்கவும், நிதித் திறனை மதிப்பிடவும் வேண்டும்.
சரக்குகளை வாங்குவதற்கும் வணிகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் வர்த்தகர்களுக்கு வங்கி வசதிகள் தேவைப்படுவதால், நிதியுதவிக்கான அணுகலும் முக்கியமானது.
வங்கிகள் நிதியுதவி வசதிகளை வழங்காத நிலையில், மலேசியாவில் வர்த்தகம் பற்றிப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.
மேலும் சர்வதேச பெட்ரோலிய சந்தையில் நுழைய விரும்பும் உள்ளூர் வர்த்தகர்களுக்கு அதிக ஆதரவு அளிக்குமாறு என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:47 pm
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:47 am
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
October 17, 2026, 11:44 am
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
October 17, 2026, 11:03 am
மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?
October 17, 2026, 10:50 am
