செய்திகள் மலேசியா
தம்பின், நிலாய் பள்ளிகளில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள்: போலிஸாரிடம் ஒன்பது புகார்கள் பதிவு
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் காவல்துறைக்கு, பள்ளிகளில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள் குறித்து ஒன்பது புகார்கள் வந்தன. பின்னர், அவற்றில் கோதுமை மாவு, நெகிழித் தட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
காவல்துறையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு, அதில் எந்த வெடிபொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன், இந்தப் பொட்டலங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், சந்தேகத்திற்கிடமான பொருட்களைத் தொடுவதைத் தவிர்க்கவும், பெறப்படாத பொட்டலங்களை உடனடியாகப் புகாரளிக்கவும் பள்ளிகளுக்கு போலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
அதே நேரத்தில், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:47 pm
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:47 am
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
October 17, 2026, 11:44 am
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
October 17, 2026, 11:43 am
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
October 17, 2026, 11:03 am
