செய்திகள் மலேசியா
கருத்து சுதந்திரத்தைப் பொறுப்புடன் அணுக வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை
கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களை ஒருவரை அவமதிப்பதற்கும், திட்டுவதற்கும், இழிவுபடுத்துவதற்கும், அவருடைய கண்ணியத்தைக் குலைப்பதற்கும் பயன்படுத்தப்படும் மேடையாக மாற்றிவிடாதீர்கள் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
கருத்து வேறுபாடுகள் இருப்பது பகைமை கொள்வதற்கான காரணம் அல்ல. நாம் ஒருவருடைய கருத்துடன் உடன்படாமல் இருக்கலாம்.
ஆனால் நமது கருத்துகளை நல்ல வார்த்தைகளுடனும் நாகரிகத்துடனும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விமர்சிக்க விரும்பினால், ஆக்கபூர்வமான முறையில் விமர்சியுங்கள்.
ஒருவருக்குச் சுட்டிக்காட்ட விரும்பினால், முழுமையான மரியாதையுடனும் பணிவுடனும் எடுத்துரையுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் ஷா ஆலம் பகுதியில் அமைந்துள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UiTM) துவாங்கு சான்சலர் மண்டபத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 105-ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு உரையாற்றியபோது சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 12:18 pm
தாப்பாவில் தீபாவளி களைக்கட்டியது; 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 17, 2026, 11:47 am
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி உறுதிப்படுத்தினார்
October 17, 2026, 11:44 am
மலாக்காவை தேசிய முன்னணி வழிநடத்துவதை பாஸ் ஏற்றுக் கொள்கிறது; ஒத்துழைப்பு தொடரும்: ஹாடி
October 17, 2026, 11:43 am
மலேசியா அதிக உள்ளூர் பெட்ரோலிய வர்த்தகர்களை உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
October 17, 2026, 11:03 am
மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?
October 17, 2026, 10:50 am
