நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் புகைமூட்டம் எப்போதுதான் குறையும்?

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவில் பல மாதங்களாகக் காட்டுத்தீ நீடிக்கிறது.

அதனால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் புகைமூட்டம் மோசமடைந்திருக்கிறது.

மலேசியாவின் பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கடுமையான வெப்பம், வறட்சியால் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

இந்தோனேசியாவில் சுவாசப் பிரச்சினைகளால் 283,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 2,000 விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தீயைக்கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

60,000-க்கும் அதிகமானோர் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 50 விமானங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தல், செயற்கை மழையைப் பொழியவைப்பது (Cloud Seeding) உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

காட்டுத்தீ ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 223 தனிநபர்களும் ஒன்பது நிறுவனங்களும் நடவடிக்கையை எதிர்நோக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

புகைமூட்டம் எப்போது குறையும்?

தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என இந்தோனேசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழக்கமாக அக்டோபரில் தொடங்கும் மழை, இம்முறை நவம்பர் வரை தாமதமாகலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

எல் நினோவின் தாக்கம் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிக்கலாம்.

வரவிருக்கும் மழைக்காலம் காட்டுத்தீயையும் புகைமூட்டத்தையும் தணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset