நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் நாளை பள்ளிகள்  வழக்கம் போல் இயங்கும்: அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து 

ஷா ஆலாம்: 

சிலாங்கூர் மாநிலத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக சிலாங்கூர் மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது 

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், அது பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் புகைமூட்டத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை மாணவர்கள் பெருமளவில் தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.

தங்கள் பிள்ளைகளின் உடல்நலம் குறித்துக் கவலைப்படும் பெற்றோருக்குத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்ப இயலாத பட்சத்தில், பெற்றோர் அல்லது காப்பாளர்கள் அதுகுறித்த விவரங்களைச் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

இது வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset