நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் பார்முலா 1 பந்தயத்தின் எதிர்காலம் நவம்பர் மாதத்தில் தீர்மானிக்கப்படும்: முகமது தௌஃபிக்

புத்ராஜெயா:

மலேசியாவில் பார்முலா 1 பந்தயத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தனது மதிப்பீட்டை அரசாங்கம் இந்த நவம்பருக்குள் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு, மேலதிக முடிவெடுப்பதற்காக அதன் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த மதிப்பீட்டில், ஏற்பாடு செய்வதற்கான செலவு, எதிர்பார்க்கப்படும் பொருளாதார வருவாய், முதலீட்டின் செயல்திறன் ஆகியவை அடங்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜோஹரி கூறினார்.

உலகின் மதிப்புமிக்க மோட்டார் பந்தயத்தின் ஏற்பாடுகள், விளையாட்டு மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டையும் நாட்டின் விளையாட்டு வீரர்களையும் பாதிக்காதவாறு ஒரு முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மலேசியாவில் இந்தப் பந்தயத்தை மீண்டும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தலைமை நிர்வாக அதிகாரி, எப்1 நிர்வாகக் குழுவினரிடையே ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset