செய்திகள் மலேசியா
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதுடன் சிறுமியின் மரணத்திற்குக் காரணமானதாக BYD கார் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
கடந்த சனிக்கிழமை ஐந்து வயது சிறுமி உயிரிழந்த விபத்தில் சம்பந்தப்பட்ட BYD மின்சார காரின் ஓட்டுநர், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரான 24 வயது ராவன் கோ வே ஹார்,
நீதிபதி அலியா அன்வார் முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர் இந்த வாதத்தை முன்வைத்தார்.
குற்றவாளிக் கூண்டில் நின்றபடி, நான் குற்றமற்றவன் என வாதிடுகிறேன் என்று அவர் கூறினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, அக்டோபர் 10 ஆம் தேதி, பிற்பகல் 3.44 மணிக்கு, இங்குள்ள நகர மையத்திலிருந்து செகம்புட் நோக்கிச் செல்லும் ஜாலான் குச்சிங் சாலையில், BYDகாரை பொதுமக்களுக்கு அபாயகரமான முறையில் ஓட்டி, 5 வயது ஆஷா அஹ்மத் ஷாஹிர் என்பவரின் மரணத்திற்குக் காரணமானதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டில் வங்கி அதிகாரி மீது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ், அதே இடத்திலும் நேரத்திலும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மூன்றாவது குற்றச்சாட்டின்படி, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 52(1)-இன் படி, அதே இடத்திலும் நேரத்திலும் நடந்த ஒரு சாலை விபத்தில் ஈடுபட்ட பிறகு நிறுத்தத் தவறியதற்காக ரேவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி அலியா, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து ஒரு ஜாமீனுடன் ரேவனுக்கு 36,000 ரிங்கிட் ஜாமின் வழங்க அனுமதி அளித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை இன்றிலிருந்து இடைநீக்கம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கிற்கான ஆவணங்கள் நவம்பர் 19 அன்று சமர்ப்பிக்கப்பட உள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 4:09 pm
பண்டார் சன்வேயில் அசாதாரண போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
October 15, 2026, 3:47 pm
சிலாங்கூர் மாநிலத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து
October 15, 2026, 12:20 pm
மெர்லிமாவ் தொகுதியை பாஸ் கட்சியிடம் ஒப்படைக்கும் அக்மால் பாதுகாப்பான தொகுதிகளை குறிவைக்கிறார்
October 15, 2026, 12:20 pm
மலேசியாவின் பார்முலா 1 பந்தயத்தின் எதிர்காலம் நவம்பர் மாதத்தில் தீர்மானிக்கப்படும்: முகமது தௌஃபிக்
October 15, 2026, 12:17 pm
லாபு தோட்டம் பிரிவு 4 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்: வோங் கா வோ
October 15, 2026, 11:25 am
ஜொகூர் பாசீர் கூடாங்கில் குப்பைத் தளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
October 15, 2026, 11:17 am
