நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாபு தோட்டம் பிரிவு 4 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்: வோங் கா வோ

சிரம்பான்:

சிரம்பான் லாபு தோட்டம் பிரிவு 4 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்.

கல்வி துணைமைச்சர் வோங் கா வோ இதனை கூறினார்.

லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் இடமாற்றம், நில விவகாரம், புதிய பள்ளி கட்டுமானம் குறித்து நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் என் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

எந்தவொரு அவசரம் இல்லாமல் இப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண்போம் என நான் அவரிடம் கூறினேன்.

இதன் அடிப்படையில் இப்பள்ளி இடமாற்றத்திற்கான நிலம் அடையாளம் காணப்பட்டது.

மேட்ரிக்டஸ் மேம்பாட்டு நிறுவனத்தின் மலேசிய விஷன் வேலியில் இப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

அந்நிலம் முறையாக பள்ளியின் பெயருக்கு மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து இப்பள்ளியின் கட்டுமான செலவில் 50% மேட்ரிக்ஸ் மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஆதரவு, நிதி திரட்டல் மூலம் எஞ்சிய தொகையும் திரட்டப்பட்டது. இதன் மூலம் நிதி பிரச்சினையும் தீர்ந்தது.

இதன் அடிப்படையில் இன்று புதிய பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆக அடுத்த ஓராண்டில் இப்பள்ளியின் கட்டுமான பணியும் பூர்த்தியாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

குறிப்பாக 2028ஆம் ஆண்டில் மாணவர்கள் இந்த புதிய பள்ளியில் கல்வியை தொடங்குவார்கள்.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் வசதிகளுடன் இப்பள்ளி கட்டப்படும்.

மேலும் தமிழ்ப்பள்ளி இடமாற்றம் விவகாரத்திற்கு இப்பள்ளி ஒரு முன்னோடியாக இருக்கும்.

பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்ற துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset