நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் பாசீர் கூடாங்கில் குப்பைத் தளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

பாசீர் கூடாங்: 

ஜொகூர், பாசீர் கூடாங் ஜாலான் முகிப்பாவில் உள்ள குப்பைத் தளத்தில் நேற்று இரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்து குறித்து இரவு 10.04 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் 0.0232 ஹெக்டேர் பரப்பளவுள்ள குப்பைத் தளம் தீயில் எரிந்து சேதமடைந்தது.

நள்ளிரவில் தொடங்கிய இந்த கோரத் தீ விபத்து, விடியற்காலை வரை தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தது.

சம்பவ இடத்திற்கு அருகில் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் தீயணைப்புப் பணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தன.

இந்தச் சவாலான சூழ்நிலையைச் சமாளிக்கக் கடற்பகுதியிலிருந்து seawater எனப்படும் கடல்நீரையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தீயணைப்பு வாகனங்களின் தண்ணீர்த் தொட்டிகளை நிரப்புவதற்காக வீரர்கள் சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர்க் குழாயைத் தேடிச் செல்ல வேண்டியிருந்தது.

இதனால் வாகனங்கள் தண்ணீருக்காகத் தொடர்ச்சியாக நீண்ட தூரம் சென்று வர வேண்டிய சவாலான நிலை உருவானது.

தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக, அதிகாலை 5.33 மணியளவில் மீட்புப் பணிகள் இரண்டு தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

ஜொகூர் ஜெயா மற்றும் பாசீர் கூடாங் நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாக 400 அடி நீளமுள்ள குழாய்கள் மற்றும் சிறிய பம்புகளைப் பயன்படுத்தினர்.

அந்தப் பம்புகள் மூலமாக அருகிலுள்ள கடல்நீரை இழுத்துத் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக இதுவரை எந்தவிதமான காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset