செய்திகள் மலேசியா
பினாங்கு பாலத்தில் பயங்கர சாலை விபத்து: பெண் படுகாயம், கணவருக்கு லேசான காயம்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு பாலத்தில் பிறை நோக்கிச் செல்லும் வழியில் கிலோமீட்டர் 1.3இல் அதிகாலை வேளையில் இரு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் காரின் உள்ளே சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவருடன் பயணித்த கணவர் லேசான காயங்களுடன் தப்பினார்.
அதிகாலை 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. அப்போது 45 வயதான அப்பெண் ஓட்டிச் சென்ற டோயோட்டா ஹைலக்ஸ் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில், அவர் ஓட்டுநர் இருக்கையிலேயே பலமாகச் சிக்கிக்கொண்டார்.
இந்த கோர விபத்தில் அப்பெண்ணின் தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அதே வாகனத்தில் உடன் பயணித்த அவரின் 47 வயது கணவருக்கு அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களே ஏற்பட்டன.
மேலும், மோதிய மற்றொரு வாகனமான ஹோண்டா பிஆர்-வி காரை ஓட்டிச் சென்ற 38 வயது நபருக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 3.49 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகப் பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் பிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்திப் போராடி அப்பெண்ணைப் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
மீட்கப்பட்ட பெண் உடனடியாக மேல் சிகிச்சைக்காக மலேசிய செம்பிறைச் சங்க மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்விபத்து குறித்துப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 4:09 pm
பண்டார் சன்வேயில் அசாதாரண போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
October 15, 2026, 3:47 pm
சிலாங்கூர் மாநிலத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து
October 15, 2026, 12:20 pm
மெர்லிமாவ் தொகுதியை பாஸ் கட்சியிடம் ஒப்படைக்கும் அக்மால் பாதுகாப்பான தொகுதிகளை குறிவைக்கிறார்
October 15, 2026, 12:20 pm
மலேசியாவின் பார்முலா 1 பந்தயத்தின் எதிர்காலம் நவம்பர் மாதத்தில் தீர்மானிக்கப்படும்: முகமது தௌஃபிக்
October 15, 2026, 12:17 pm
லாபு தோட்டம் பிரிவு 4 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்: வோங் கா வோ
October 15, 2026, 11:25 am
