செய்திகள் மலேசியா
2027 பட்ஜெட் பி40, எம்40 மக்களின் சுமையைக் குறைக்கும்; பிரதமருக்கும் மடானி அரசுக்கும் நன்றி: டாக்டர் குணராஜ்
செந்தோசா:
மக்களின் நலன், பொருளாதார வலிமை மற்றும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2027ஆம் ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் மதானி அரசாங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
ஒரு பட்ஜெட்டின் வலிமை அறிவிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் அளவில் மட்டுமல்லாமல், அது மக்களின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதில் தான் உள்ளது.
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடும் குடும்பங்கள், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோர், அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப வருமானத்தைச் சமநிலைப்படுத்த வேண்டிய தொழிலாளர்கள் ஆகியோரின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை அல்லது கடன் தவணைகள், போக்குவரத்து, கல்வி, மருத்துவச் செலவுகள் ஆகியவற்றால் தொடர்ந்து நிதிச் சுமையை எதிர்கொள்கின்றனர்.
அதேவேளையில், எம்40 நடுத்தர வருமானக் குடும்பங்களும் வீட்டுக் கடன், பிள்ளைகளின் பள்ளிச் செலவுகள், குடும்பப் பராமரிப்பு, வயதான பெற்றோர்களைக் கவனித்தல் போன்ற பொறுப்புகளால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், 2027ஆம் ஆண்டில் எஸ்டிஆர், சாரா திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை 16 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் செலவுகளை மிகக் கவனமாகக் கணக்கிட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் சற்றே நிம்மதியை அளிக்கும்.
ஆனால், இந்த உதவிகள் உண்மையில் தேவைப்படுவோருக்குச் சென்றடைவதையும், குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்வதே மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 9,000 இலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தும் முன்மொழிவையும், குறிப்பிட்ட நடுத்தர வருமானப் பிரிவினருக்கான வருமான வரி விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தையும் அவர் வரவேற்றுள்ளார்.
2027 ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்துவது தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கியமான நடவடிக்கையாகும்.
எனினும், இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைய தொழிலாளர் உற்பத்தித்திறன், வணிக நிறுவனங்களின் நிலைத்தன்மை மற்றும் தொழில்வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஆகியவையும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய இந்தியச் சமூகம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கிவிடாமல் இருப்பதற்கு கல்வி, திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு, தொழில்முனைவு ஆகிய துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது, குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்கவும் அவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்யவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2027 பட்ஜெட்டை மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் உணரும் மாற்றங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடுவார்கள் என்று டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் திறமையாகவும் வெளிப்படையாகவும் உரிய காலத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தேவையற்ற நிர்வாகச் சிக்கல்கள் இன்றி உதவிகள் இலக்குக் குழுக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
நசீர் ஹுசைனை எம்ஏசிசி மீண்டும் அழைத்துள்ளது
October 14, 2026, 3:15 pm
இந்து சமய வழிபாட்டு வழிமுறை சர்ச்சைகளிலிருந்து விலகி இருங்கள்; பதற்றத்தைத் தூண்ட வேண்டாம்: இந்து சங்கம்
October 14, 2026, 3:14 pm
