நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்

புத்ராஜெயா:

சவூதி அரேபியாவில் நிலவி வரும் பதற்றத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும், பணிபுரியும் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகத்திடமிருந்து தினசரி பெறப்படும் அறிக்கைகள், இரு நகரங்களிலும் உள்ள மலேசியர்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.

ரியாத்தில் உள்ள நமது தூதரகம், ஜித்தாவில் உள்ள நமது துணைத் தூதரிடமிருந்து நான் பெறும் தினசரி அறிக்கைகளின்படி, மலேசியர்களின் நிலைமை அனைத்தும் நலமாக உள்ளது.

அங்குள்ள மலேசியப் பணியாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று அவர் இன்று இங்கு, பொதுப்பணித்துறை அமைச்சால் வெளியுறவு அமைச்சகத்திற்கும், மேலும் மூன்று அரசு வளாகங்களுக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு நிறுவல் திட்டத்தை ஒப்படைக்கும் விழாவில் கலந்துகொண்ட பிறகு ஊடகங்களிடம் கூறினார்.

நகரத்தில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தூதரகம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset