செய்திகள் மலேசியா
இந்து சமய வழிபாட்டு வழிமுறை சர்ச்சைகளிலிருந்து விலகி இருங்கள்; பதற்றத்தைத் தூண்ட வேண்டாம்: இந்து சங்கம்
கோலாலம்பூர்:
பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டம் உள்ளிட்ட இந்து சமய வழிபாட்டில் பங்கேற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இஸ்லாமிய மத அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட மலாய்க்காரர் ஒருவரைச் சுற்றியுள்ள சர்ச்சையிலிருந்து இந்துக்கள் விலகி இருக்க வேண்டும்.
மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய செயல்களையோ அல்லது அறிக்கைகளையோ தவிர்க்க வேண்டும்.
வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரின் மதக் கடமைகள் தொடர்பான சர்ச்சைகளில் இந்து சமூகம் ஈடுபடுவதற்கு எந்தத் தேவையும் இல்லை, எந்தப் பயனும் இல்லை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கூறினார்.
இந்து வழிபாட்டுத் தலங்களும் கலாச்சார விழாக்களும் பல்வேறு மத மற்றும் கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த பார்வையாளர்களையும் வருகையாளர்களையும் நீண்ட காலமாக வரவேற்று வருகின்றன.
இதன் மூலம், மலேசியாவின் பல மத சமூகத்தின் சிறப்பம்சமான நல்லிணக்க உணர்வை அவை பிரதிபலிக்கின்றன.
அதே சமயம், கூட்டமைப்பின் மதமாக இஸ்லாத்தின் அரசியலமைப்பு நிலையை இந்து சங்கம் அங்கீகரித்து மதிக்கிறது.
மற்ற மதங்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் பின்பற்றப்படுவதற்கான உரிமையையும் அது ஏற்றுக் கொள்கிறது என்று அவர் கூறினார்.
மலேசியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள், மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத நடைமுறைகளைச் சமநிலைப்படுத்த வேண்டும் என்று தங்க கணேசன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
நசீர் ஹுசைனை எம்ஏசிசி மீண்டும் அழைத்துள்ளது
October 14, 2026, 3:14 pm
