செய்திகள் மலேசியா
முஸ்லிம் அல்லாதோர் விவகார பிரிவு தொடர்ந்து நீடிக்கும்: டத்தோ சிவநேசன் உறுதி
ஈப்போ:
பேரா மாநில அரசாங்கத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரங்களுக்கான தனிப் பிரிவு தொடர்ந்து நிலை நிறுத்தப்படும்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் உள்ள உணவகம் ஒன்றில், சீக்கிய அமைப்புகளுக்கு 7 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கியப் பின்ன் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை வலியுறுத்தினார்.
பேரா மாநிலத்தில் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள நான், முஸ்லிம் அல்லாதோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனிக்க தனிப் பிரிவு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று மாநில அரசு இந்த பிரிவை அமைத்தது. அது தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் முஸ்லிம் அல்லாத சமூகத்தினர், குறிப்பாக இந்தியர்கள், சீனர்கள், சீக்கியர்களு ஏராளமான நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த பிரிவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. முஸ்லிம் அல்லாதோரின் ஆலய பிரச்சினைகள், கல்வி, கலாச்சார நிகழ்வுகள், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இந்த பிரிவின் மூலமாகவே திறம்பட கையாளப்படுகின்றன என்றார்.
மேலும், பேரா மாநில அரசு அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் அரசாக தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
நசீர் ஹுசைனை எம்ஏசிசி மீண்டும் அழைத்துள்ளது
October 14, 2026, 3:15 pm
