செய்திகள் மலேசியா
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
ஜோகூர் பாரு:
மலேசியாவில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது. மொத்தம் உள்ள 68 கண்காணிப்பு நிலையங்களில் 28 நிலையங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டு (API) அளவுகளைப் பதிவு செய்துள்ளன.
இன்று காலை 27 இடங்களில் இந்த நிலை காணப்பட்டது.தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜோகூரில் உள்ள பாசிர் குடாங் (Pasir Gudang) பகுதியில் அதிகபட்சமாக 179 அளவில் காற்றின் மோசமான தரம் பதிவாகியுள்ளது.
இது அப்பகுதி முழுவதும் நிலவும் கடுமையான மூடுபனி (haze) கடும் பாதிப்பைக் குறிக்கிறது.
தொடரும் மூடுபனி பாதிப்பு காரணமாக, ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலும், சிலாங்கூர், பகாங், சபா, சரவாக் ஆகியவற்றின் சில பகுதிகளிலும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 5:36 pm
அடையாள அட்டை கட்டணத்தைத் தவிர்க்க பொய் புகார் செய்த பெண்ணுக்கு RM1000 ரிங்கிட் அபராதம்
October 14, 2026, 5:09 pm
சவூதி அரேபியாவில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
