நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்

கோலாலம்பூர்:

ஆலய தூய்மைப் பணிகளில் ஈடுபடும் முஸ்லிம் மாணவர்களின் செயல்களை மத ரீதியான சர்ச்சையாகப் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் அது சகிப்புத்தன்மையையும் சமூக ஒற்றுமையையும் வளர்ப்பதற்கான ஒரு களமாக அமையக்கூடும் என்று  மஹிமா தலைவர் டத்தோ என். சிவக்குமார் கூறினார்.

இப்பிரச்சினையை எழுப்பி, இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துள்ள சில தரப்பினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு மதத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இச்செயல் மேற்கொள்ளப்படும் வரை, பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய மாணவர்கள் காட்டும் ஆர்வம் ஒரு வகையான சமூக ஒத்துழைப்பாகும்.

அது நேர்மறையாகப் பார்க்கப்பட வேண்டும்.

ஒரு மாணவர் குழு மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்யத் தங்கள் ஆற்றலைச் செலவிட முன்வரும்போது, ​​அந்தச் செயல் இனங்களுக்கிடையே சகிப்புத்தன்மையையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கான ஒரு களமாக அமைய முடியாதா?

நமது நாகரிகமான, சமூகம் சார்ந்த வாழ்வில், ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதையின் மதிப்பு கொண்டாடப்படவும் வரவேற்கப்படவும் வேண்டும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியுடனும், மத உணர்வுகளையும் வழிபாட்டுத் தலத்தின் விதிகளையும் மதித்தும், ஒரு செயல்பாடு தன்னார்வமாக மேற்கொள்ளப்பட்டால், அதன் நோக்கம், செயல்படுத்தல், அதனால் கிடைக்கும் கல்வி மதிப்பு ஆகியவற்றை மதிப்பீட்டில் கருத்தில் கொள்ள வேண்டும்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமூகங்களுடன் நல்லுறவை வளர்ப்பதுடன், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதால், இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக சமூகம் பாரபட்சம் காட்டக்கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset