செய்திகள் மலேசியா
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
கோலாலம்பூர்:
1எம்.டி.பி வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைதண்டனை, 11.4 பில்லியன் ரிங்கிட் அபராதத்தை இடைக்காலமாக நிறுத்தி வைக்குமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மேற்கொண்ட விண்ணப்ப மனு தள்ளுபடி செய்யப்பட்டது
பிரதிவாதி மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, நீதிபதி நூர் ருவேனா முகமட் நுர்டின் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
மனுதாரரான 73 வயதான நஜீப், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேல்முறையீடு முடிவடையும் வரை இந்தத் தண்டனை அமலாக்கத்தை இடைநிறுத்துமாறு கோரியிருந்தார்.
இருப்பினும், தண்டனையை இடைநிறுத்துவதற்கு ஏதுவான சிறப்பு அல்லது விதிவிலக்கான காரணங்களை மனுதாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜீப்பின் தண்டனையை மேல்முறையீட்டு மற்றும் கூட்டரசு நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன.
இதனால், அவரை இனி முதன்முறை குற்றம் செய்தவராகக் கருத முடியாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
கடந்த டிசம்பர் 26 அன்று, 1MDB நிதியில் RM2.3 பில்லியன் தொடர்பில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய 4 குற்றச்சாட்டுகள் மற்றும் பணமோசடி தொடர்பான 21 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM11.4 பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 5:36 pm
அடையாள அட்டை கட்டணத்தைத் தவிர்க்க பொய் புகார் செய்த பெண்ணுக்கு RM1000 ரிங்கிட் அபராதம்
October 14, 2026, 5:09 pm
சவூதி அரேபியாவில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
