செய்திகள் மலேசியா
அக்டோபர் 17 வரை ஜெட்டா, மதீனாவுக்கான விமான சேவைகளை மலேசியா ஏர்லைன்ஸ் ரத்து செய்தது
சிப்பாங்:
சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா, மதீனாவுடன் கோலாலம்பூர், ஜொகூர்பாருவை இணைக்கும் தனது அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 12 முதல் 17 வரையிலான காலத்திற்கு ரத்து செய்வதாக மலேசியா ஏர்லைன்ஸ் இன்று அறிவித்தது.
சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களின் அசல் விமானத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், முழுப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கோ அல்லது கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி தங்கள் விமானத் தேதியை மற்றொரு தேதிக்கு மாற்றுவதற்கோ தேர்வு செய்யுமாறு மலேசியா ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டது.
பாதிக்கப்பட்ட பயணிகள், மலேசியா ஏர்லைன்ஸ் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்ள ‘My Booking’ பகுதி, நேரலை அரட்டை சேவை அல்லது 1 300 88 3000 (மலேசியாவிற்குள்) அல்லது +603 7843 3000 (சர்வதேச அளவில்) என்ற எண்ணில் உள்ள உலகளாவிய தொடர்பு மையம் வழியாக விமானத் தேதியை மாற்றுவதற்கோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கோ கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
சரியான நேரத்தில் அறிவிப்புகளைப் பெறுவதற்கு, பயணிகள் தங்களின் அனைத்து தொடர்பு விவரங்களையும் எனது முன்பதிவு' (My Booking) பகுதி மூலம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் நினைவூட்டப்படுகிறார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 10:15 pm
பிற மதங்களின் சடங்குகளைச் செய்ததற்காக முஸ்லிம் இளைஞர் தாயுடன் கைது: ஜாய்ஸ்
October 13, 2026, 5:03 pm
LPT 2 நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி ஓட்டுநர் பலி
October 13, 2026, 4:38 pm
72 கிலோ கிரேம் போதைப்பொருள் கடத்திய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டபட்டார்
October 13, 2026, 3:49 pm
புகை மூட்டம்: ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலானில் பள்ளிகள் மூடப்படும்
October 13, 2026, 3:32 pm
ஆர்ஓஎஸ் தடை உத்தரவை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தொடங்க தேசியக் கூட்டணிக்கு அனுமதி
October 13, 2026, 3:30 pm
11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
October 13, 2026, 3:29 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான கட்டாய 2% ஈபிஎப் பங்களிப்புகளை அரசு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கணபதிராவ்
October 13, 2026, 3:29 pm
அம்னோ கட்சி சம்பந்தப்பட்டிருந்தாலும் முறைகேடுகளை நியாயப்படுத்தாதீர்கள்: கைரி
October 13, 2026, 3:28 pm
