செய்திகள் மலேசியா
பிற மதங்களின் சடங்குகளைச் செய்ததற்காக முஸ்லிம் இளைஞர் தாயுடன் கைது: ஜாய்ஸ்
ஷாஆலம்:
கோலாலம்பூரில் பிற மதங்களின் சடங்குகளைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு முஸ்லிம் இளைஞர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகாரத் துறை (ஜாய்ஸ்) உறுதிப்படுத்தியுள்ளது.
21 வயதான அந்த இளைஞர், அவரது 52 வயதான தாயுடன் கைது செய்யப்பட்டதாக ஜாய்ஸ் இயக்குநர் டத்தோ முகமது ஷாஜிஹான் அகமது தெரிவித்தார்.
ஷாஆலம் கீழ்நிலை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மத விவகாரத் துறையால் செயல்படுத்தப்பட்ட பரஸ்பர கைது ஆணை மூலம் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஷரியா குற்றங்கள் சட்டம் (சிலாங்கூர்) 1995-இன் 4 மற்றும் 10 பிரிவுகளின் கீழ், இரண்டு சந்தேக நபர்கள் தற்போது ஜாய்ஸ்-ஆல் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர் சம்பந்தப்பட்ட வழக்கு சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் குறைந்தது 14 நபர்களை ஜாய்ஸ் வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை தங்கள் துறை தீவிரமாகக் கருதுவதாகவும், அதிகார வரம்பு, சட்டம் மற்றும் வழக்கின் உண்மைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதி செய்யும் என்று முகமது ஷாஜிஹான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 10:16 pm
அக்டோபர் 17 வரை ஜெட்டா, மதீனாவுக்கான விமான சேவைகளை மலேசியா ஏர்லைன்ஸ் ரத்து செய்தது
October 13, 2026, 5:03 pm
LPT 2 நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி ஓட்டுநர் பலி
October 13, 2026, 4:38 pm
72 கிலோ கிரேம் போதைப்பொருள் கடத்திய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டபட்டார்
October 13, 2026, 3:49 pm
புகை மூட்டம்: ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலானில் பள்ளிகள் மூடப்படும்
October 13, 2026, 3:32 pm
ஆர்ஓஎஸ் தடை உத்தரவை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தொடங்க தேசியக் கூட்டணிக்கு அனுமதி
October 13, 2026, 3:30 pm
11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
October 13, 2026, 3:29 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான கட்டாய 2% ஈபிஎப் பங்களிப்புகளை அரசு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கணபதிராவ்
October 13, 2026, 3:29 pm
அம்னோ கட்சி சம்பந்தப்பட்டிருந்தாலும் முறைகேடுகளை நியாயப்படுத்தாதீர்கள்: கைரி
October 13, 2026, 3:28 pm
