நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ கட்சி சம்பந்தப்பட்டிருந்தாலும் முறைகேடுகளை நியாயப்படுத்தாதீர்கள்: கைரி

கோலாலம்பூர்:

தனது கட்சியான அம்னோவின் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட, முறைகேடுகளை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

அரசியல் விசுவாசம் நேர்மையை மீறக்கூடாது என்று கூறிய கைரி, முறைகேடு மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

நமது தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட, ஊழல் பற்றிப் பேச நாம் அஞ்சக்கூடாது.

தவறானது தவறுதான். எதை நியாயப்படுத்த முடியாதோ, அதை நியாயப்படுத்தக் கூடாது. நிர்வாகக் குறைபாடு என்பது நிர்வாகக் குறைபாடுதான்.

ஒரு வழக்கு இருந்தால், அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும், நேர்மை விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச இளம் எதிர்காலத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் குழு அமர்வில் கைரி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset