நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

72 கிலோ கிரேம் போதைப்பொருள் கடத்திய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டபட்டார் 

அலோர் ஸ்டார்: 

கடந்த மாதம் 72KG கெனாபிஸ் வகை போதைப்பொருளைக் கடத்தியதாக ஆடவர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

மாஜிஸ்டிரெட் எலியானா இஸ்மாயில் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயதுடைய முஹம்மத் ஃபைஸ்  நஸ்ரி குற்றச்சாட்டு புரிந்து கொண்டதாக தலை அசைத்தார் 

குற்றப்பத்திரிகையின்படி, செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில், அலோர் ஸ்டார் செலாத்தான் டோல் சாவடிக்குப் பிறகு சாலையில் கைது செய்யப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் 72 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் செக்‌ஷன் 39B(1)(a)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிப்ரவரி 2-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset