நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகை மூட்டம்: ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலானில் பள்ளிகள் மூடப்படும்

புத்ராஜெயா:

புகை மூட்டத்தைத் தொடர்ந்து ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை புதன்கிழமை மூடப்படும்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் மூகநூல் அறிக்கையில் வாயிலாக தெரிவித்தார்.

நாட்டில் பல மாநிலங்களில் புகை மூட்டம் மோசமடைந்து வரும் நிலையில் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அவ்வகையின் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும்  நாளை புதன்கிழமை அன்று மூடப்படும்.

மேலும் சிலாங்கூரில் உலு லங்காட், சிப்பாங், பகாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின், சபாவில் தாவாவ், சரவாக்கில் செரியான், ஶ்ரீ அமான், லுபோக் அந்து ஆகிய கல்வி இலாகாவின் கீழ் செயல்படும் பள்ளிகள் மூடப்படுகிறது.

மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில், வீட்டிலிருந்து கற்பித்தல், கற்றல்  செயல்படுத்தப்படும், அதே நேரத்தில் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஃபட்லினா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset