செய்திகள் மலேசியா
பிற மதங்களின் சடங்குகளைச் செய்வதும், சுத்தம் செய்வதும் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: பினாங்கு முஃப்தி
ஜார்ஜ்டவுன்:
பிற மதங்களின் சடங்குகளைச் செய்வதும், சுத்தம் செய்வதும் முஸ்லிம்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது என்று பினாங்கு முஃப்தி அலுவலகம் இன்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளது.
பின்னர், பினாங்கு முஃப்தி முகமது சுக்கி உத்மானின் அறிக்கைக்கான இணைப்பை அது வெளியிட்டது.
அதில், இஸ்லாமியச் சட்டத்திற்கு எதிரான மதச் சடங்குகளிலிருந்து விலகி இருப்பதுடன், முஸ்லிம்கள் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்வதில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாம் தனது பின்பற்றுபவர்களை நன்மை செய்வதையும், வெவ்வேறு மத சமூகங்களுடன் நல்லிணக்க உறவுகளை ஏற்படுத்துவதையும் ஒருபோதும் தடை செய்யவில்லை.
ஆனால் ஒவ்வொரு செயலும் இஸ்லாமியச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று முகமது சுக்கி கூறியதாக அந்த ஊடக அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 12:34 pm
தீபாவளி சந்தை; சிரம்பான் நகர வணிகர்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணப்படும்: டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை
October 13, 2026, 12:08 pm
மலேசிய மலாய்க்காரர்களை திருமணம் செய்வதால் வெளிநாட்டினர் பூமிபுத்ராக்களாக ஆகிவிடுவதில்லை: சைபுடின்
October 13, 2026, 12:07 pm
மலாக்காவில் தேசிய முன்னணி கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிப்பு
October 13, 2026, 12:07 pm
புகைமூட்டம்: ஜொகூர் போலிஸ் 13 மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களைச் செயல்படுத்தியது
October 13, 2026, 12:06 pm
பாலிடெக்னிக் மாணவி எலிசா கொலை வழக்கில் 19 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு
October 13, 2026, 12:05 pm
கத்தியால் குத்தப்பட்ட சீனப் பெண், முன்னாள் காதலருக்கு எதிரான விசாரணையை விரைவுபடுத்தக் கோரியுள்ளார்
October 13, 2026, 10:41 am
முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை
October 13, 2026, 10:14 am
வணிக வளாகம் அருகே ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
October 13, 2026, 10:13 am
