நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி சந்தை; சிரம்பான் நகர வணிகர்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணப்படும்: டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை

சிரம்பான்:

தீபாவளியை முன்னிட்டு  சிரம்பான் நகர வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படும் என சிரம்பான் மாநகர் மன்றத் தலைவர் உறுதியளித்துள்ளளார்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

வரும் தீபாவளியை முன்னிட்டு சிரம்பான் நகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி மஸ்ரியுடன் இன்று சந்திப்பு நடைபெற்றது.

மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி டத்தோ வி.எஸ். மோகன், முரளி, டத்தோ தினாளன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது ​​வர்த்தகர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கருத்துக்களையும் கவலைகளையும் நாங்கள் முன்வைத்தோம்.

எழுப்பப்பட்ட அனைத்து விஷயங்களையும் மாநகர் மன்றத் தலைவர் ஏற்றுக் கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், எழுப்பப்பட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களின் நலனுக்காகத் தீர்வுகளைக் கண்டறிய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்க நேரம் ஒதுக்கி, அவற்றை வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பளித்த மாநகர் மன்றத் தலைவருக்கு  பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கூட்டம் ஒரு நியாயமான  தீர்வை கொடுக்கும்.  அதே வேளையில் இந்தப் பண்டிகைக் காலம் முழுவதும் வியாபாரிகள் தங்கள் வணிகத்தை மேலும் சுமுகமாக நடத்துவதை உறுதிசெய்ய உதவும் என்ற  நாங்கள் நம்புகிறோம்.

ஆக ஒன்றிணைந்து சிரம்பான் தீபாவளி சந்தையை வெற்றி பெறச் செய்வோம் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset