நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீயணைப்பு உதவிக்கான முன்மொழிவுக்கு இந்தோனேசியா பதிலளிக்கவில்லை: ஜாஹித்

ஈப்போ:

கலிமந்தான், சுமாத்ராவில் எல்லை தாண்டிய புகைமூட்டத்தை ஏற்படுத்திய தீயை அணைக்க உதவுவதாக மலேசியா வழங்கிய முன்மொழிவு குறித்து, இந்தோனேசியாவிடமிருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை.

சமீபத்தில் ஜாகர்த்தாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, ​​இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, துணை அதிபர் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா ஆகியோரைச் சந்தித்தபோது இந்த முன்மொழிவு விடுக்கப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையும் வெளியுறவு அமைச்சும் இந்தோனேசியாவில் உள்ள தங்களது சகாக்களுக்குக் கடிதங்களை அனுப்பியுள்ளன.

ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று அவர் கூறினார்.

இதுவரை அவர்களுக்கு நாங்கள் உதவுவதற்கு இந்தோனேசியாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நீங்கள் மனப்பூர்வமாக உதவி வழங்க முன்வந்ததற்கு நன்றி. ஆனால் இன்னும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு எங்கள் உதவி தேவைப்படாது என்பது நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம், அது நல்லது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset