செய்திகள் மலேசியா
ஷா ஆலாமில் சாலை விபத்து: இருவர் பலி, ஐவர் காயம்
பெட்டாலிங் ஜெயா:
நேற்றிரவு ஷா ஆலாம், ஹைக்கோம் தொழிற்துறை - கிளேன்மேரி சாலை அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் இருவர் பலியான வேளையில் ஐவர் காயம் அடைந்தனர்.
சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஷ்பார் இதனை உறுதிப்படுத்தினர்.
20 வயதுடைய இருவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 19 வயதுடைய மற்ற இருவர் லேசான காயங்களுடன் தப்பினர்.
புரோட்டான் எக்ஸோரா பல்நோக்கு வாகனத்தில் (MPV) பயணித்த 29 வயதுப் பெண் மற்றும் 27, 28 வயதுடைய இரண்டு ஆண்கள் லேசான காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.
இந்த சாலை விபத்து தொடர்பாக தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 14 ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை: இஸ்மாயில் லசிம்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
