செய்திகள் மலேசியா
புகைமூட்டத்தால் இன்று திங்கட்கிழமை மூடப்பட்ட, திறக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்
கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை முதல், கல்வியமைச்சு தற்போதைய புகைமூட்டக் காலம் முழுவதும் பள்ளிகளை மூடுவதற்கான காற்று மாசுபாடு வரம்பைக் குறைத்துள்ளது.
மேலும், மாநில கல்வித் துறைகள் காற்றின் தர அறிக்கைகளைக் கண்காணித்து, எந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக காற்று மாசுபாடு குறியீட்டு அளவுகள் 150 முதல் 180 வரை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என்ற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள் விவரங்கள்:
ஜொகூர்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 12 முதல் 16 வரை மூடப்படும்.
சிலாங்கூர்: உலு லங்காட், கோம்பாக், பெட்டாலிங் பெர்டானா மாவட்டக் கல்வி இலாகாக்களின் கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படும்.
கோலாலம்பூர், புத்ராஜெயா: பங்சார், புடு கல்வி இலாகாக்களின் கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படும்.
மீண்டும் திறக்கப்பட்ட அல்லது வழக்கம் போல் செயல்படும் பள்ளிகள் விவரங்கள்:
மலாக்கா: கல்வியமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன.
நெகிரி செம்பிலான்: மாநில கல்வி இலாகாவிம் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.
பேரா: மாநிலக் கல்வி இலாகாவின் கீழ் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
இதில் மீண்டும் திறக்கப்பட்ட கிந்தா உதாரா, கிந்தா செலாத்தான், கோல கங்சார் பள்ளிகளும் அடங்கும்.
கெடா, கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ், பினாங்கு, பகாங், சபா, சரவா, லாபுவான் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளும் வழக்கம் போல் இயங்குகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை: இஸ்மாயில் லசிம்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
