செய்திகள் மலேசியா
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
ஈப்போ:
பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவில் API காற்றின் குறியீடு 180ஐ தாண்டிய நிலையில் பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளிகள், கல்விக்கூடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படுகிறது
கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்விக்கூடங்கள் குறிப்பாக கிந்தா உத்தாரா, கிந்தா செலாத்தான், கோலகங்சார் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் உடனடியாக மூடப்படுவதாக பேராக் மாநில கல்வி இலாகாவின் இயக்குநர் சுல்கஃப்ளி முஹம்மத் மொக்தார்
"மாணவர்களின் கல்வியில் தொடர்ச்சியை உறுதிசெய்ய, பள்ளிகள் வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைக்கு ஆசிரியர்களும் இதர ஊழியர்களும் ஆதரவு நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்பதை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கல்வி அமைச்சின் அல்லது மாநில கல்வி இலாகாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை வலம் வரலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:27 pm
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
