செய்திகள் மலேசியா
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
ஜொகூர்பாரு:
நிராகரிக்கப்பட்ட காதலால் பழிவாங்கும் விதமாக 4ஆம் படிவ மாணவியான ஐரீன் சோபியா முகமது கைரூல் ஃபைசல் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர், 96 செ.மீ நீளமுள்ள இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் கூறினார்.
தனது குழுவினர் இரத்தக் கறைகளுடன் கூடிய ஒரு விளையாட்டு உடையையும், டை-யில் சுற்றப்பட்டிருந்த இரும்புக் கம்பியையும் கைப்பற்றினர்.
பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கும், டை துணியில் சுற்றப்பட்டிருந்த 96 செ.மீ நீளமுள்ள ஒரு நீண்ட இரும்புக் கம்பியையும் போலிஸ் கைப்பற்றியுள்ளது.
சமீபத்திய விசாரணையின் அடிப்படையில், காதலை நிராகரித்ததற்காக பாதிக்கப்பட்டவர் மீது சந்தேக நபருக்கு ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வே இந்தக் கொலைக்கான காரணம்.
தலையில் அடிபட்ட தழும்புகள் இருந்தன, மேலும் இறந்தவரின் கைகள் மற்றும் உடலின் பல பாகங்களிலும் அடிபட்ட தழும்புகள் இருந்தன என்று அவர் ஜொகூர்பாருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகவும், விசாரணை அறிக்கை இன்று ஜொகூர் மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
மேலதிக அறிவுறுத்தல்களுக்காக விசாரணை அறிக்கைகள் இன்று அனுப்பப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 12:29 pm
தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 9, 2026, 12:15 pm
உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
October 9, 2026, 12:13 pm
ஐரீன் சோபியா கொலை வழக்கு: 16 வயது சிறுவனின் காவல் நாளை முதல் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது
October 9, 2026, 9:39 am
விசுவாசம் பதிவு தொடர்பாக ஃபிர்தாஸ் வோங் மீது கணபதிராவ் வழக்குத் தொடர்ந்தார்
October 9, 2026, 9:18 am
