நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

பெட்டாலிங் ஜெயா: 

தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது 

தென் மாநிலங்களான மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது 

இன்று காலை 10 மணி வரை இந்த நிலவரம் காட்டுவதாக சுற்றுச்சூழல் துறை தகவல் தெரிவித்தது 

நாடு முழுவதும் மொத்தம் 37 பகுதிகளில் ஆரோக்கியமற்ற API அளவுகளும், மேலும் 31 பகுதிகளில் மிதமான காற்றுத் தரமும் பதிவாகியுள்ளன.

எந்தப் பகுதியிலும் காற்றின் தரம் சிறப்பாக இல்லை, API அளவீடுகள் மிகவும் ஆரோக்கியமற்றதாகவோ அல்லது அபாயகரமானதாகவோ இருந்தன.

நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 185ஆக பதிவான வேளையில் நீலாயில் காற்றின் தரம் 183ஆக பதிவு செய்யப்பட்டது 

மலக்காவின் புக்கிட் ரம்பாய், பண்டார் ராயா மலக்காவில் காற்றின் IPU குறியீடு 184ஆகவும் அலோர் காஜாவில் 178ஆகவும் பதிவானது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset