செய்திகள் மலேசியா
உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
கிள்ளான்:
சட்டப்பூர்வ தகுதிகள் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களிடம் வாகனங்களை ஒப்படைக்கும்போது, வாகன உரிமையாளர்களும் முதலாளிகளும் தங்கள் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது.
சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் டத்தோ அஹ்மத் கமாருசமான் மெஹாட் இதனை கூறினார்.
சிலர் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும், மற்றவர்கள் உள்ளூர் உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுக்கப்படுகிறது.
அமலாக்க நடவடிக்கை ஓட்டுநர்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏனெனில் சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யாத நபர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு உரிமையாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் உள்ளது.
தொழிலாளர் கூலியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தகுதிகள், பாதுகாப்பு அம்சங்களையும் புறக்கணிக்காதீர்கள்.
ஒருவர் வாகனம் ஓட்டுவதற்குத் தகுதி இல்லாதவராக இருந்தால், அவரிடம் வாகனத்தை ஒப்படைக்காதீர்கள் என்று அவர் இன்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
முன்னதாக, கமாருசமான் சிலாங்கூர் ஜேபிஜேவின் 24 உறுப்பினர்களுடன் இணைந்து, இன்று காலை 6.30 மணி முதல், இங்குள்ள பெக்கான் பாரு கிள்ளான், ஜாலான் மேருவில் உள்ள பாசார் போரோங் ஆகிய பகுதிகளைச் சுற்றி வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 9, 2026, 12:13 pm
ஐரீன் சோபியா கொலை வழக்கு: 16 வயது சிறுவனின் காவல் நாளை முதல் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது
October 9, 2026, 9:39 am
விசுவாசம் பதிவு தொடர்பாக ஃபிர்தாஸ் வோங் மீது கணபதிராவ் வழக்குத் தொடர்ந்தார்
October 9, 2026, 9:18 am
