நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐரீன் சோபியா கொலை வழக்கு: 16 வயது சிறுவனின் காவல் நாளை முதல் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது

பத்துபகாட்:

கடந்த சனிக்கிழமை இங்குள்ள யோங் பெங் அருகே உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 16 வயதான ஐரீன் சோபியா முகமது கைரூல் பைசல் கொலை வழக்கில் சந்தேக நபராக உள்ள, பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவனின் காவல் காலத்தை ஆறு நாட்களுக்கு நீட்டிக்க 
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதித்தது.

முதல் போலிஸ் மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்ததை அடுத்து, மாஜிஸ்திரேட் ஐமி நவ்வர் முகமது ஒத்மான், 16 வயது சந்தேக நபரின் காவல் காலத்தை நாளை முதல் வியாழக்கிழமை வரை நீட்டிக்க அனுமதித்தார்.

இந்தக் காவல் கால நீட்டிப்பு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் காவல்துறையினர் தங்கள் விசாரணையைத் தொடரவும், சந்தேக நபரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும், மேலும் விசாரணை ஆவணங்களை முழுமையாக்கி, அதன் பிறகு அவரை மேலதிக நடவடிக்கைக்காக ஜொகூர் வழக்குறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பவும் வழிவகை செய்கிறது.

முன்னதாக, பத்து பகாட் மாவட்ட காவல் தலைமையகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் பாதுகாப்புடன், சந்தேக நபர் காலை 8.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset