நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் இன்று மாலை மக்களவையில் தாக்கல் செய்வார்

கோலாலம்பூர்:

பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 3.30 மணிக்கு மக்களவையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

நாட்டின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துவதோடு, உயர் மதிப்பு வளர்ச்சியானது மக்களின் நலனுக்காக சமமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் தெளிவான உறுதியின் அடிப்படையில், அவர் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவுசெலவுத் திட்டமாக இந்தத் தாக்கல் அமைந்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விளக்கக்காட்சி, பெர்னாமா டிவி உட்பட பல்வேறு உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள், சமூக ஊடகத் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும். 

பெர்னாமா டிவி இன்று இரவு 8.30 மணிக்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வின் சுருக்கத்தையும் ஒளிபரப்பும்.

நிதியமைச்சின் இணையதளத்தில் உள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய அறிக்கையின்படி, முந்தைய வரவுசெலவுத் திட்டத் தொடர்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்தைத் தொடரும் வகையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset