செய்திகள் மலேசியா
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சிறப்பு கருத்தரங்கு எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தில் ஏ பெற மாணவர்களை தயார்படுத்தும்: சுரேன் கந்தா
கோலாலம்பூர்:
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சிறப்பு கருத்தரங்கு எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தில் ஏ பெற மாணவர்களை தயார்படுத்தும்.
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், தமிழைப் பயிலும் மாணவர்கள் அப்பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெறுவதை உறுதிசெய்வது முக்கியம் என ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் கருதுகிறது.
தமிழைப் பயிலும் ஒவ்வொரு இந்திய மாணவரும் எஸ்பிஎம் தேர்வில் தமிழில் ஏ பெறுவதைப் பெருமையாகக் கருத வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மொழித் திறனிலும் சிறந்து விளங்க ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தொடர்ந்து வழிகாட்டும்.
அவ்வகையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பெட்டாலிங் ஜெயா ஶ்ரீ முருகன் கல்வி நிலைய தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் எஸ்பிஎம் தமிழ் தாள் 1, தாள் 2 ஆகிய இரு பகுதிகளும் விரிவாகக் கையாளப்படும்.
பல ஆண்டுகளாக எஸ்பிஎம் மாணவர்களுக்கு வழிகாட்டி, தேர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் அனுபவமிக்க தமிழ் மொழிப் பாட நிபுணர்கள் இக்கருத்தரங்கை வழிநடத்துவர்.
தேர்வுக் கேள்விகளைச் சரியாக அணுகும் முறைகள், சிறந்த விடைகளை எழுதும் நுட்பங்கள், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகள், மாணவர்கள் பொதுவாகச் செய்யும் தவறுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் ஆகியவை இக்கருத்தரங்கில் பகிரப்படும்.
மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் வகையில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தன்னம்பிக்கை ஊக்கக் குழுவும் இக்கருத்தரங்கில் பங்களிக்கும்.
ஆகவே எஸ்பிஎம் மாணவர்கள் முன்கூட்டியே தங்களது பதிவை உறுதி செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு ஷரன் முத்து – 010-293 6184
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 9, 2026, 12:15 pm
உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
October 9, 2026, 12:13 pm
ஐரீன் சோபியா கொலை வழக்கு: 16 வயது சிறுவனின் காவல் நாளை முதல் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது
October 9, 2026, 9:39 am
விசுவாசம் பதிவு தொடர்பாக ஃபிர்தாஸ் வோங் மீது கணபதிராவ் வழக்குத் தொடர்ந்தார்
October 9, 2026, 9:18 am
