நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூச்சிங்கில் 3.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 2 பேரை போலிஸ் கைது செய்தது

கூச்சிங்:

கடந்த  செப்டம்பர் 28 அன்று இங்குள்ள கூச்சிங் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், இரண்டு உள்ளூர் நபர்களை போலிஸ் கைது செய்து.

அவர்களிடம் இருந்து 3.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளதாக மதிப்பிடப்பட்ட 32.73 கிலோ எராமின் 5 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தது.

சரவா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், 25,  39 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் விமான நிலையம் வருகை மண்டபத்தில் கைது செய்யப்பட்டதாக சரவா தற்காலிக போலிஸ் தலைவர்  சைபுல்லிசான் இஷாக் தெரிவித்தார்.

ஜொகூர் பாருவிலிருந்து போதைப்பொருட்களைப் பெற்று, அவற்றை விமானம் மூலம் குச்சிங்கிற்குக் கொண்டு வந்து நகரம் முழுவதும் விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset