செய்திகள் மலேசியா
தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் முயற்சிக்கு பின்னணியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்
கோலாலம்பூர்:
தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் முயற்சிக்கு பின்னணியில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் இருந்துள்ளார்.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் இதனை கூறினார்.
மலேசியர் ஒருவருக்குச் சொந்தமான விமான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி, லாவோஸிலிருந்து மணிலாவிற்கு அரை டன்னுக்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஷாபு) போதைப்பொருளைக் கடத்த முயன்றதன் பின்னணியில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரே முக்கிய சூத்திரதாரி என்று நம்பப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட பொருட்களை லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸுக்குக் கொண்டு செல்வதற்காக, அந்த நபர் சுமார் 202,250 மலேசிய ரிங்கிட் செலவில் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
சந்தேக நபரைக் கண்டறிந்து கைது செய்யும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், ராயல் மலேசிய காவல்துறை அந்த நபர் குறித்த தகவல்களை பிலிப்பைன்ஸ் போதைப்பொருள் அமலாக்க முகமையுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.
மணிலாவிற்கான சட்டவிரோத சரக்கை மறைப்பதற்காக, விமானத்தின் சரக்குப் பட்டியலில் போதைப்பொருட்கள் வேப் பொருட்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, மலேசியாவால் இயக்கப்படும் அந்த விமானம் அக்டோபர் 1 ஆம் தேதி லுவாங் பிரபாங் சர்வதேச விமான நிலையத்தில் லாவோஸ் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டதாக ஹுசைன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 9, 2026, 12:15 pm
உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
October 9, 2026, 12:13 pm
ஐரீன் சோபியா கொலை வழக்கு: 16 வயது சிறுவனின் காவல் நாளை முதல் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது
October 9, 2026, 9:39 am
விசுவாசம் பதிவு தொடர்பாக ஃபிர்தாஸ் வோங் மீது கணபதிராவ் வழக்குத் தொடர்ந்தார்
October 9, 2026, 9:18 am
