நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியின் கால்பந்து மரபுக்கு ரொனால்டோ மரியாதை செலுத்துகிறார்

போனஸ் அயர்ஸ்:

தனது சர்வதேச விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்ட அர்ஜெண்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடனான தனது கடுமையான போட்டி மனப்பான்மையை ஒதுக்கி வைத்தார்.

நேற்று போனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் அரங்கத்தில் பெனின் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற ஆட்டத்தில், மெஸ்ஸி ஒரு கோல் அடித்து இரண்டு கோல்களுக்கு உதவியும் செய்து, தனது நேர்த்தியான இறுதி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் மெஸ்ஸி இத்தனை ஆண்டுகள் உங்கள் நாட்டிற்காகப் போராடியதன் மூலம், என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு வரலாற்றை நீங்கள் படைத்துள்ளீர்கள்.

அர்ஜெண்டினாவுடன் நீங்கள் சாதித்ததை நான் மிகவும் மதிக்கிறேன். உங்களுக்கு என் அன்பான அணைப்புகள் என்று மெஸ்ஸியின் சமூக ஊடகப் பதிவில் ரொனால்டோ கருத்துத் தெரிவித்தார்.

சர்வதேச அரங்கிலிருந்து விலகி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், வெளிர் நீலம், வெள்ளை நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற ஏக்கம் தனக்கு ஏற்பட்டதாக மெஸ்ஸி அந்தப் பதிவில் ஒப்புக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset