நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் வெற்றி

மாட்ரிட்:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் ஸ்பெயின் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் இங்கிலாந்து அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை ஹாரி கேய்ன், எஸ்ரி கோன்சா, பென் ஒய்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பெல்ஜியும் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் அல்பேனியா, பின்லாந்து, குரோஷியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset