நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்

லண்டன்:

மௌரிசியோ போச்சென்டினோவை ஓல்ட் டிராபோர்டுக்கு அழைத்து வர விரும்பினால், மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மைக்கல் கேரிக்கின் மோசமான தொடக்கத்தால் அணி தரமிறங்கும் மண்டலத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கிளப் மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

மென்செஸ்டர் யுனைடெட் ஜாம்பவானுக்குப் பதிலாக எடி ஹவ், அன்டோனியோ கோன்டே ஆகியோரின் பெயர்களும் சாத்தியமான வேட்பாளர்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இருப்பினும், கடந்த கோடையில் அமெரிக்க தேசிய அணியுடன் ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்ட போதிலும், போச்சென்டினோ முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறார்.

மிக சமீபத்தில் தெ அத்லெடிக் அந்த ஒப்பந்தத்தில் ஒரு விடுவிப்பு விதி உள்ளதாக வெளிப்படுத்தியது. 

அதன்படி, மென்செஸ்டர் யுனைடெட் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தத் தயாராக இருந்தால், அந்த நிர்வாகியின் சேவைகளைப் பெற முடியும்.

அந்த அர்ஜெண்டினா பயிற்சியாளரின் விடுவிப்பு விதியின் மதிப்பு 40.5 மில்லியன் ரிங்கி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.

இருப்பினும், போச்சென்டினோவை இந்த சலுகையை ஏற்றுக்கொண்டால், இந்தத் தொகை இன்னும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. 

ஏனெனில், அவரது உதவியாளர்களைத் தங்களுடன் அழைத்து வர மென்செஸ்டர் யுனைடெட் மேலும் பல மில்லியன் டாலர்களை இழப்பீடாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset