செய்திகள் விளையாட்டு
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
லண்டன்:
பிபா தலைவர் பதவிக்கான போட்டியில் ஜியானி இன்பான்டினோவை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் கேப்டன் ரமோன் வேகா அஞ்சவில்லை.
மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
1999இல் உடைந்த கணுக்காலுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய போதிலும், டோட்டன்ஹாம் அணி லீக் கிண்ணத்தை வெல்ல உதவிய 55 வயதான வேகா, தனது போராட்ட குணமும் உறுதியும் தேர்தலில் தன்னை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்று நம்புகிறார்.
முன்னாள் வீரரான இவர், பிரிமியர் லீக்கில் 60-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அத்துடன், சிரி அவில் காக்லியாரி அணிக்காக ஒரு சீசனிலும், செல்டிக் அணிக்காகக் கடன் ஒப்பந்தத்திலும் விளையாடியுள்ளார்.
2003இல் ஓய்வு பெற்ற பிறகு, ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய வேகா, வணிகத் துறையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
மேலும், 2015, 2019, 2023-ஆம் ஆண்டுகளில் பிபா தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
பிரான்ஸ் அணிக்கு எம்பாப்பே புதிய உற்சாகத்துடன் திரும்புகிறார்: கோனதே
November 10, 2026, 9:43 am
மேஜர் லீக் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை: தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி வென்ற மெஸ்ஸி
November 9, 2026, 12:31 pm
ஷோயப் அக்தரின் வேகப்பந்து வீச்சு சாதனையை இனி எந்த மனிதராலும் முறியடிக்க முடியாது: கங்குலி
November 9, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 9, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
November 6, 2026, 10:04 am
ரொனால்டோவுக்கு பிரியாவிடை விழா நடத்த போர்த்துகல் திட்டமிட்டுள்ளது
November 6, 2026, 10:00 am
டேவிட் பெக்கம் மென்செஸ்டர் யுனைடெட்டின் புதிய உரிமையாளரா?
November 5, 2026, 3:33 pm
