செய்திகள் விளையாட்டு
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன்: அரையிறுதிக்கு முன்னேறி AARON TAI- YAP ROY KING அசத்தல்
கோலாலம்பூர்:
ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் மலேசியாவின் AARON TAI- YAP ROY KING ஆண்கள் இரட்டையர் பிரிவு இணையினர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கடந்த மாதம் ஜோடி சேர்ந்ததிலிருந்து அவர்கள் பங்கேற்ற ஐந்து தொடர்களில், இது அவர்களின் மூன்றாவது அரையிறுதிப் பிரவேசமாகும்.
உலகத் தரவரிசையில் 57ஆவது இடத்தில் உள்ள ஆரன்-ராய் கிங் இணை, கடந்த மாதம் தங்களின் முதல் போட்டியாகக் களமிறங்கிய ஆர்டிக் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலக டூர் சூப்பர் 500 (World Tour Super 500) சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி ஆட்டத்தில், தைவான் நாட்டின் 15ஆவது நிலை ஜோடியான லீ ஜெ ஹுவேய் - யாங் போ சுவான் இணையை எதிர்த்து அவர்கள் விளையாடினர்.
வெறும் 28 நிமிடங்களில் நிறைவடைந்த இந்த ஆட்டத்தில், 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் தைவான் ஜோடியை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில், டென்மார்க் ஜோடியான டேனியல் லண்ட்கார்ட் - மாட்ஸ் வெஸ்டர்கார்ட் அல்லது ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா - கியோஹை யமாஷிதா ஆகிய இரு ஜோடிகளில் ஒருவரை ஆரன்-ராய் கிங் இணை எதிர்கொள்ளவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 11:22 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 12, 2026, 11:10 pm
மென்செஸ்டர் யுனைடெட் கேரிக்கைப் பணி நீக்கம் செய்தது
November 12, 2026, 9:07 am
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கிளையன் எம்பாப்பே விளையாட மாட்டார்
November 12, 2026, 9:06 am
மென்செஸ்டர் யுனைடெட், போச்சென்டினோ இடையே வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டது
November 11, 2026, 11:11 am
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
பிரான்ஸ் அணிக்கு எம்பாப்பே புதிய உற்சாகத்துடன் திரும்புகிறார்: கோனதே
November 10, 2026, 9:43 am
மேஜர் லீக் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை: தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி வென்ற மெஸ்ஸி
November 9, 2026, 12:31 pm
