நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரவு முழுவதும் நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்தன 

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டில் புகைமூட்டம் இரவு முழுவதும் மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக, 33 பகுதிகளில் காற்றின் தரம் மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது என்று API குறியீடு தெரிவித்தது 

சிலாங்கூர் மாநிலத்தின் ஜொஹான் செத்தியாவில் காற்றின் தரம் இன்று காலை 10 மணி வரை 191ஆக இருந்த நிலையில் செராஸ், நெகிரி செம்பிலான் நீலாயில் காற்றின் தரம் 189ஆக பதிவானது 

ஜொகூர் மாநிலத்தில் கடும் புகைமூட்டம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் பத்து பஹாட்டில் 188ஆகவும் சிகாமாட்டில் 177ஆகவும் பாசீர் கூடாங்கில் 174ஆகவும் லார்க்கின் பகுதியில் 167ஆகவும் குளுவாங்கில் 161ஆகவும் பதிவானது 

மலாக்காவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது. புக்கிட் ரம்பாய், பண்டார் ராயா மலாக்காவில் காற்றின் தரம் தலா 175ஆகவும் 173ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

API தரவுகளின் படி 0 முதல் 50 வரை காற்றின் தரம் சீராக உள்ளது என்றும் 51 முதல் 100 வரை மிதமான காற்று மாசுபாடு என்றும் 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலை என்றும் 201 முதல் 300 வரை மிக ஆரோக்கிய மற்றது என்றும் வகைப்படுத்தபட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset